நீலமேகப்பெருமாள் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நீலமேகப்பெருமாள் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.;
குளித்தலை,
குளித்தலையில் பிரசித்தி பெற்ற நீலமேகப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை இக்கோவிலில் விஷேச பூஜைகள் செய்யப்பட்டு கோவிலின் முன்பு உள்ள கொடிமரத்தில் கருடகொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கருடசேவையும், வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. நீலமேகப்பெருமாள் திருக்கோவிலின் வைகாசி விசாக தேர் திருவிழாவையொட்டி நேற்று நடந்த உற்சவம் முதல் வருகிற 15-ந்தேதி வரை பகலில் பல்லக்கிலும், இரவில் ஹம்ச, ஹனுமந்த, ஷேச, யானை, குதிரை ஆகிய வாகனங்களில் உற்சவ மூர்த்திகளின் வீதி உலாவும் நடைபெற உள்ளது.