காணாமல் போன வாலிபர் பிணம் கிணற்றில் மிதந்த மர்மம்

காணாமல் போன வாலிபர் பிணம் கிணற்றில் மிதந்த மர்மம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;

Update: 2022-12-27 17:39 GMT

சேத்துப்பட்டு

காணாமல் போன வாலிபர் பிணம் கிணற்றில் மிதந்த மர்மம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரணமல்லூர் அருகே உள்ள கடுகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிகாந்த் (வயது 35). இவரது மனைவி ராஜேஸ்வரி (31). மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் லட்சுமிகாந்த் வீட்டிலிருந்து சென்று விட்டார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் கடுகனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விநாயகம் என்ற என்பவருடைய நிலத்தில் ஒரு நபர் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் பெரணமல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

இது ்குறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்த போது இறந்து கிடந்தவர் லட்சுமிகாந்த் என்பது தெரியவந்தது. பின்னர் அவரது வீட்டுக்கு போலீசார் சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் லட்சுமிகாந்த் உடலை போலீசார் கிணற்றிலிருந்து மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமிகாந்த் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்