ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7 ஆயிரத்தை பறித்து சென்ற மர்மநபர்கள்

விராலிமலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7 ஆயிரத்தை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-09-19 18:29 GMT

விராலிமலை:

பெட்ரோல் விற்பனை நிலையம்

விராலிமலை தாலுகா மேலசின்ன பழனிபட்டியை சேர்ந்தவர் சுப்பையா மகன் பாக்கியராஜ் (வயது 25). இவர், விராலிமலை அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று  வழக்கம் போல் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வேலைக்கு சென்ற பாக்கியராஜ் அன்று இரவு பெட்ரோல் விற்பனையான பணத்துடன் அங்குள்ள அறையில் தூங்கியுள்ளார்.

மேலும் இவருடன் வேலை பார்க்கும் சபரி என்பவர் பெட்ரோல் போடும் பம்ப் அருகே தூங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் பெட்ரோல் போடும்படி சபரியிடம் கூறியுள்ளனர். அதற்கு அவர்களிடம் சபரி பணத்தை கேட்டதற்கு ஜி பேயில் அனுப்புவதாக கூறி பெட்ரோலை போடும்படி கூறியுள்ளனர்.

ரூ.7 ஆயிரம் பறிப்பு

பின்னர் பணத்தை கேட்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை சபரியின் கழுத்தில் வைத்து மிரட்டி உள்ள னர். இதையடுத்து பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளே படுத்திருந்த பாக்கியராஜிடம் சென்று கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.7 ஆயிரத்து 11 மற்றும் 2 செல்போன்களை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து பாக்கியராஜ் விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்