கம்பம் அருகே திராட்சை கொடிகளை வெட்டி வீசிய மர்ம கும்பல்

கம்பம் அருகே திராட்சை கொடிகளை மர்ம கும்பல் வெட்டி வீசியது.;

Update: 2023-07-17 21:00 GMT

கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியை சேர்ந்தவர் மொக்கபாண்டி (வயது 45). இவர் திராட்சை விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆயிரம் திராட்சை கொடிகளை நட்டு வளர்த்து வந்தார். தற்போது முதல் சீசன் என்பதால் திராட்சை பழங்கள் கொத்து, கொத்தாக காய்த்து அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அவரது தோட்டத்துக்குள் புகுந்த மர்மகும்பல், அங்கிருந்த திராட்சை கொடிகளை வெட்டி வீசிவிட்டு சென்றுவிட்டது.

இதற்கிடையே நேற்று காலை தனது தோட்டத்துக்கு வந்த மொக்கபாண்டி, திராட்சை கொடிகள் வெட்டப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திராட்சை கொடிகளை வெட்டி நாசம் செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்