மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்
பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம் ஆனது.;
பாளையங்கோட்டை:
பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி உமா (வயது 52). இவருடைய மகன் சதீஷ் கடந்த மாதம் வெளிநாடு சென்றுள்ளார். இவர் பயன்படுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார்கள்.
இந்த நிலையில் அந்த மோட்டார் சைக்கிளை உமா நேற்று காலையில் வெளியே எடுத்து செல்ல முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து திடீரென புகையுடன் தீ எரிந்தது.
உடனே அவர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு சென்று விட்டார். இதில் மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிந்து நாசமானது. மோட்டார் சைக்கிள் பேட்டரி மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.