காணாமல் போனவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு
கலசபாக்கம் அருகே காணாமல் போனவர் வனப்பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலசபாக்கம்
கலசபாக்கம் அருகே காணாமல் போனவர் வனப்பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூலி தொழிலாளி
கலசபாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேவனாம்பட்டு காலனி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 55), விவசாய கூலி தொழிலாளி.
இவர் கடந்த 24-ந் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
மேலும் அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால் தொடர்ந்து ரிங் மட்டும் சென்றது. அவர் போன் எடுக்காத காரணத்தால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் பாலாஜி கலசபாக்கம் போலீசில் புகார் செய்தார்.
அழுகிய நிலையில் உடல்
இந்த நிலையில் இன்று தேவனாம்பட்டு வனப்பகுதி அருகே உள்ள முருகையன் மர்ம முறையில் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதை அப்பகுதியாக சென்ற ஒருவர் பார்த்து போலீசார் தகவல் தெரிவித்தாார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகையன் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.