மினி வேன் தீ வைத்து எரிப்பு
ஆம்பூர் அருகே மினி வேன் தீ வைத்து எரிக்கப்பட்டது.
ஆம்பூர் டவுன் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் வயது (45). இவர் மினி வேனில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் வேனை நிறுத்தி வைத்திருந்தார். நேற்று அதிகாலையில் மர்ம கும்பல் வேனுக்கு தீ வைத்துள்ளனர். இதில் வேன் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் வேன் முற்றிலும் எரிந்து சாம்பலானது. வேனில் இருந்த பொருட்களும் தீயில் கருகியது. இது குறித்து உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.