கூட்டுறவு வங்கியை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்

திருநாவலூரில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி கூட்டுறவு வங்கியை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு-முள்ளு;

Update: 2022-12-20 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில கடந்த 2010-ம் ஆண்டு 493 விவசாயிகள் அடகு வைத்த 1,790 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது சம்பந்தமாக திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நகைகளை அடகு வைத்த விவசாயிகள் தங்கள் நகைகளை ஒப்படைக்கக்கோரி கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமான சின்னதுரை தலைமையில் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நேற்று காலை திருநாவலூர் வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட ஊா்வலமாக புறப்பட்டனா்.

அப்போது சாலையின் குறுக்கே பேரிகார்டுகளை வைத்து அவர்களை போலீசார் தடுத்தனா். ஆனால் போராட்டக்காரர்கள் பேரிகார்டுகளை தள்ளிவிட்டு வங்கியை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் வங்கியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் சமாதானம் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்