தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

பள்ளி மாணவியிடம் தகாத செயல்: தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்;

Update: 2023-04-23 18:45 GMT

விழுப்புரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திண்டிவனம் விட்டலாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர் சகலகலாதரன் என்பவர் சாக்லேட் கொடுத்து தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் தலைமை ஆசிரியர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு காவல்துறை ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. எனவே உடனடியாக தலைமையாசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து உண்மை நிலை அறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் ராமதாஸ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கண்ணதாசன், நகர செயலாளர் குமரேசன் ஆகியோர் நேற்று, பாதிக்கப்பட்ட மாணவியின் கிராமத்திற்கு சென்று களஆய்வு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்