பெண்ணிடம் நகையை பறிக்க முயன்றவர் கைது

அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் பெண்ணிடம் நகையை பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-02-07 18:45 GMT

அய்யலூர் அருகே உள்ள தீத்தாகிழவனூரை சேர்ந்தவர் நீலமணி (வயது 19). கூலித் தொழிலாளி. கடந்த 4-ந்தேதி இவர், அய்யலூரில் நடந்த பேசும் பழனியாண்டவர் கோவில் திருவிழாற்கு சென்றார். திருவிழாவில் நீலமணி அருகே அமர்ந்திருந்த பெண் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். அவரை நீலமணி பிடிக்க முயன்ற போது, அந்தப் பெண் அங்கிருந்து தப்பி ஓடினார். அதில் கீழே விழுந்து அந்த பெண் படுகாயம் அடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், நீலமணியிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்றது, தூத்துக்குடி மாவட்டம், அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அபிராமி (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்