அரிவாளை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது

அரிவாளை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்;

Update: 2023-10-21 18:45 GMT

கீழக்கரை புது கிழக்கு தெருவை சேர்ந்தவர் செய்யது இபுராகிம்(வயது 37). இவர் நேற்று கீழக்கரை புதிய பஸ் நிலையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (33) என்பவர் செய்யது இபுராகிமை தகாத வார்த்தையில் பேசி கையில் இருந்த அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணத்தை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து சதாம் உசேனை கைது செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்