தொழிலாளியை மிரட்டியவர் சிக்கினார்
சேரன்மாதேவியில் தொழிலாளியை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.;
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி அருகே உள்ள கூனியூர் சாலை தெருவை சேர்ந்த கணேசன் (வயது 50). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (20) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் விக்னேஷ் நேற்று முன்தினம் கணேசன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணேசன் சேரன்மாதேவி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர்.