பெண்ணை மிரட்டியவர் கைது

களக்காடு அருகே பெண்ணை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-09-16 19:47 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், ராஜபுதூர் தெருவை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி மகன் மன்னன்பெருமாள் (வயது 43). இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை அவதூறாக பேசினார். இதனை அவர் தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து அவரது பெற்றோர் மன்னன்பெருமாளை கண்டித்தனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அந்த பெண்ணை மன்னன்பெருமாள் மீண்டும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மன்னன்பெருமாளை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்