மோட்டார்கள் திருடியவர் பிடிபட்டார்
கங்கைகொண்டான் அருகே மோட்டார்கள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.;
நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச பயன்படுத்தி வந்த நீர்மூழ்கி மோட்டாரை நேற்று மர்மநபர் திருடி சென்றுள்ளார். அதேபோல் கங்கைகொண்டான் அருகே அணைத்தலையூர் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தளவாய்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள நீர்மூழ்கி மோட்டாரையும் மர்ம நபர் திருடி சென்றுள்ளார்.
இதுகுறித்து ஜெகநாதன், தளவாய்சாமி ஆகியோர் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், நீர்மூழ்கி மோட்டார்களை திருடியது அணைத்தலையூரை சேர்ந்த மாரியப்பன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 நீர்மூழ்கி மோட்டார்களையும் பறிமுதல் செய்தனர்.