ஒர்க் ஷாப்பில் பணம் திருடியவர் கைது

போடி அருகே ஒர்க் ஷாப்பில் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர் .;

Update: 2023-06-28 19:30 GMT

போடி அருகே உள்ள கோம்பையை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 40). இவர் போடி அரசு பொறியியல் கல்லூரி அருகே கார் பழுது நீக்கும் ஒர்க் ஷாப்பில் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஈஸ்வரன் கடையில் இருந்த மேஜை டிராவில் ரூ.52 ஆயிரம் வைத்திருந்தார். இதை அருகே உள்ள மற்ெறாரு ஒர்க் ஷாப்பில் வேலை செய்யும் மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (24) என்பவர் திருடி சென்று விட்டார். இதுகுறித்து ஈஸ்வரன் போடி தாலுகா போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்