கோவில் உண்டியல் பணத்தை திருடியவர் கைது
திமிரி அருகே கோவில் உண்டியல் பணத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.;
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த காவனூர் பகுதியில், புங்கனூர் சாலையில் சிவ காமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விசேஷ நாட்களில் அதிகப்படியான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந்் தேதி கோவில் உண்டியல் பணம் சுமார் ரூ.6 ஆயிரம் மற்றும் வை-பை மோடம் ஆகியவை திருட்டு போனது. இதுகுறித்து நாட்டாண்மை அசோக்குமார் திமிரி போலீசில் புகார் செய்திருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்து அதிலிருந்த பதிவை வைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் வேலூரை அடுத்த பள்ள இடையம்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 48) என்பவர் கோவில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து வைபை மோடம் மற்றும் ரூ.6 ஆயிரத்தை மீட்டனர்.