மதுபோதையில் ஆபாசமாக பேசியவர் கைது

மதுபோதையில் ஆபாசமாக பேசியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-06-17 19:07 GMT

விராலிமலை தாலுகா, சூரியூரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 52). இவர் நேற்று காலை மதுபோதையில் விராலிமலை-கீரனூர் சாலையிலுள்ள ஆலங்குளத்தில் நின்றுகொண்டு ஆபாசமாக பேசிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த எழவம்பட்டியை சேர்ந்த முருகேசன் (48) என்பவர் தட்டி கேட்டார். அப்போது அவரையும் ஆபாசமாக பேசியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்