குளத்து மண்ணை பதுக்கியவர் கைது
குளத்து மண்ணை பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
பேட்டை:
பழைய பேட்டையை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர் நெல்லை-தென்காசி சாலையில் அமைந்துள்ள அகில இந்தியா வானொலி நிலையம் அருகே 45 யூனிட் குளத்து மண் திருடி பதுக்கி வைத்திருப்பதாக கண்டியப்பேரி கிராம நிர்வாக அலுவலர் பராசக்தி பேட்டை போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகனை கைது செய்தார்.