4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

கொலை வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-06-24 19:49 GMT

சேரன்மாதேவி:

சங்கரன்கோவில் வரகனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் ராஜேஷ் என்ற ராஜேஷ் கண்ணன் (வயது 38). இவர் மீது கொலை, கொள்ளை மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் மீது சேரன்மாதேவி போலீஸ் நிலையத்தில், கடந்த 2013-ம் ஆண்டு கூனியூர் பகுதியைச் சேர்ந்த குமார் பாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜேஷ் கண்ணன் கடந்த 2018-ம் ஆண்டு தலைமறைவானார். இவரை பிடிக்க நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டு 4 ஆண்டுகளான நிலையில், அவர் சென்னையில் பதுங்கி இருப்பதாக சேரன்மாதேவி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சேரன்மாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று, தலைமறைவாக இருந்த ராஜேஷ் கண்ணனை மடக்கிப்பிடித்து கைது செய்து நெல்லைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து ராஜேஷ் கண்ணனை நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்