கல்குவாரி பள்ளத்தில் விழுந்தவர் சாவு

கல்குவாரி பள்ளத்தில் விழுந்தவர் சாவு;

Update: 2022-11-06 19:15 GMT

பேரையூர்

பேரையூர் அருகே உள்ள சந்தையூரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 41). இவரது மனைவி பிரிந்து சென்றதால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தேவன்குறிச்சி மலை கல்குவாரி பள்ளத்தில் இறந்த நிலையில் முத்துகிருஷ்ணன் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்