டீக்கடைக்காரரை கத்தியால் வெட்டியவர் கைது

விழுப்புரம் அருகே டீக்கடைக்காரரை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-18 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற கோபாலகிருஷ்ணன்(வயது 46). இவரும் விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த சசிக்குமார்(44) என்பவரும் ஜானகிபுரம் சந்திப்பு பகுதியில் அருகருகே டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்குள் வாடிக்கையாளர்களை கவர்வதில் ஏற்பட்ட பிரச்சினையில் சசிக்குமார், அவரது நண்பர்கள் கருணாகரன், கலியமூர்த்தி, செல்வம் ஆகியோர் சேர்ந்து சுரேஷை திட்டி தாக்கியதோடு கத்தியால் அவரது கையை வெட்டியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த சுரேஷ், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சசிக்குமார் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிக்குமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்