திட்டக்குடி அருகே வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கியவருக்கு வலைவீச்சு

திட்டக்குடி அருகே வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கியவரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.;

Update: 2022-10-20 18:45 GMT

ராமநத்தம், 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா அகரம்சீகூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் மகன் ரஞ்சித்குமார்(வயது 34). இவர் திட்டக்குடி வெல்லிங்டன் நீர்த்தேக்க பாசன வாய்க்கால் கரையோரம் மதுஅருந்தி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மது அருந்துவதற்காக வந்த ஒகலூர் கிராமத்தை சேர்ந்த முருகனுக்கும்(28), ரஞ்சித்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகன் அருகில் இருந்த பீர்பாட்டிலால் ரஞ்சித்குமாரின் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் ரஞ்சித்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய முருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்