விவசாயியை தாக்கியவர் கைது
கயத்தாறு அருகே விவசாயியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.;
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள தெற்கு கோனாறு கோட்டை கிராமம் நடுத்தெருவை சோ்ந்தவர் விவசாயி அருணாச்சலம். இவரது மகன் பொன்னுச்சாமி (வயது 42). இவர் விவசாய வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சண்முகையா என்பவருடைய மகன் ராமசாமி, அவரது தம்பி வீரகுமரன், சண்முகையா மற்றும் முருகன் ஆகியோர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொன்னுச்சாமியிடம் இடப்பிரச்சினை காரணமாக, நீ இங்கு வேலை செய்யக்கூடாது, உனக்கு இந்த தோட்டம் கிடையாது. ஆகவே வெளியேற வேண்டும் என்று அவரிடம் தகராறு செய்தனர். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பொன்னுச்சாமி காயமடைந்து கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணி திலீப் வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்தார்.