மனைவியை தாக்கியவர் கைது

மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-10-12 19:40 GMT

நெல்லை அருகே சீவலப்பேரி நொச்சிகுளம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 35). இவருடைய மனைவி கலைச்செல்வி (33). கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த வேல்முருகன் தனது மனைவி கலைச்செல்வியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கலைச்செல்வி சீவலப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்