நெல்லை கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மனைவி சண்முகலட்சுமி (வயது 33). வடிவேல் அடிக்கடி சண்முகலட்சுமியிடம் தகராறு செய்து வந்தார்.
சம்பவத்தன்று சண்முக லட்சுமி வீட்டில் இருக்கும்போது அவரை வடிவேல் அவதூறாக பேசி கையால் அடித்து டெட்டனேட்டரை காட்டி உன்னை கொளுத்தி விடுவேன் என கூறி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சண்முக லட்சுமி அளித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வடிவேலை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 9 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.