மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-25 11:04 GMT

ஆரணி

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரங்களை கட்டுப்படுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆரணி பழைய பஸ் நிலையம் அருேக மணிக்கூண்டு பகுதியில் விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழங்குடியின பெண்களை கூட்டு பாலியல் செய்தவர்களை உடனடியாக கைது செய்து தூக்கிலிட வேண்டும், மணிப்பூர் பழங்குடியினர் மக்களுக்கு உரிய பாதுகாப்பும் நிதியுதவியும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இதில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்