விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-08-14 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தேரடி திடல் முன்பு மணிப்பூர் கலவரம் மற்றும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்தும், பா.ஜ.க. அரசை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் லிங்கவளவன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் பீர் மைதீன் முன்னிலை வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் முரசு தமிழப்பன், துணை செயலாளர் குழந்தை வள்ளுவன், மாவட்ட துணை செயலாளர் ஜெரால்ட் வளவன், தமிழக மக்கள் நலக் கட்சி பொதுச் செயலாளர் பாஸ்டர் தன்ராஜ், எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர தலைவர் அப்துல் நசீர் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் குட்டிவளவன், சங்கரன்கோவில் நகர செயலாளர் திருமா சுந்தர், ஒன்றிய செயலாளர் கணேசன், குருவிகுளம் ஒன்றிய செயலாளர் கனியமுதன், எஸ்.டி.பி.ஐ. நகர்மன்ற உறுப்பினர் ஷேக் முகம்மது உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்