கரும்பு பயிர் காப்பீடு செய்ய ஆகஸ்டு 31-ந் தேதி கடைசி நாள்

கரும்பு பயிர் காப்பீடு செய்ய ஆகஸ்டு 31-ந் தேதி கடைசி நாள் என அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-03 13:52 GMT

வேலூர்

வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மகேந்திர பிரதாப் தீட்சித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கவும், விவசாயத்தை நிலை பெற செய்யவும், திருந்திய பிரமத மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு பயிரிடப்படும் கரும்பு பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.2,600 செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம். மேலும் கரும்பு பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

விவசாயிகள் கடைசி வரை காத்திருக்காமல், உடனடியாக கரும்பு பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்து கொள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களை விவசாயிகள் அணுகலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அடங்கல், நில உரிமைப்பட்டா, ஆதார் நகல் மற்றும் நடப்பில் உள்ள வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகத்துடன் உரிய தவணைதொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்ய, கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து விதைப்புச் சான்று பெற்றும் காப்பீடு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம். உழவன் செயலியில் இருந்தும் தகவல்களை பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்