கிணற்றில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி சாவு

கிணற்றில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2022-09-30 18:45 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமந்துறையை சேர்ந்தவர் முத்தையன் (வயது45). கூலி தொழிலாளி. இவர் விஜயபுரத்தை சேர்ந்த செல்லம்மாள் என்பவர் வயலுக்கு பூச்சி மருந்து தெளிக்க வேலைக்கு சென்றுள்ளார். மருந்து தெளிப்பு வேலை முடிந்து கை, கால்களை கழுவுவதற்காக அருகில் உள்ள கிணற்றிற்கு சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி முத்தையன் கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்தையன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்