கோர்ட்டில் நீதிபதி கொடியேற்றினார்
சிவகிரி கோர்ட்டில் நீதிபதி கொடியேற்றினார்
சிவகிரி:
சிவகிரியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து நீதிபதி கே.எல்.பிரியங்கா குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பள்ளி மாணவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில், தலைமை எழுத்தர், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.