தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் தொழிலாளி பரிதாப சாவு

வத்திராயிருப்பு அருகே தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update:2022-12-14 00:31 IST

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு அருகே தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ஜல்லிக்கட்டு காளை

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முடுக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது55). டீக்கடை தொழிலாளி. இவர் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்தார். இவர் தினமும் காளையை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுவது வழக்கம்.

நேற்று காலையில் காளையை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டுவிட்டு மாலையில் காளையை அழைத்துவர சென்றார். அப்போது காளை முருகனை பலமாக முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவரை வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தொழிலாளி பலி

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தான் வளர்த்து வந்த காளை முட்டியதில், முருகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்