மாலையிட்டான் வாரி வாய்க்காலை தூர்வார வேண்டும்
மன்னார்குடி அருகே மாலையிட்டான்வாரி வாய்க்காலில் ஆகாயதாமரை செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
மன்னார்குடி அருகே மாலையிட்டான்வாரி வாய்க்காலில் ஆகாயதாமரை செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாலையிட்டான்வாரி வாய்க்கால்
மன்னார்குடியை அடுத்த துளசேந்திரபுரம் அருகில் மாலையிட்டான்வாரி வாய்க்கால் செல்கிறது. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மழைக்காலத்தில் அதிகப்படியான நீரை வெளியேற்றும் முக்கியமான வாய்க்காலாக மாலையிட்டான்வாரி உள்ளது.
துளசேந்திரபுரம் அருகே உள்ள இந்த வாய்க்கால் பகுதி முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் செடிகள் அடர்ந்து தண்ணீர் செல்ல தடை ஏற்படுத்தும் விதமாக புதர் மண்டி உள்ளது.
இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வரும் மழைக்காலத்திற்கு முன்னதாக வாய்க்காலையும், புதரையும் சுத்தப்படுத்தினால் தான் மழை நேரத்தில் கூடுதல் தண்ணீர் வடிந்து விவசாய பயிர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தூர்வார வேண்டும்
எனவே விவசாயிகளின் நலன்கருதி மாலையிட்டான் வாரி வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.