காயம் அடைந்த தொழிலாளி சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
அய்யலூர் அருகே உள்ள வேங்கனூரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 29). கூலித் தொழிலாளி. கடந்த 23-ந்தேதி இவர், வேங்கனூரில் இருந்து அய்யலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வேங்கனூர் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி அவர் கீழே விழுந்தார்.இதில் படுகாயம் அடைந்த லோகநாதனுக்கு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.