காயம் அடைந்த சிறுவனும் பலி
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த போது காயம் அடைந்த சிறுவன் பலியானார்.;
சிவகாசி,
சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பூசாரிதேவன்பட்டி கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த திருப்பதி என்பவர் பேன்சிரக பட்டாசுகளுக்கு பயன்படுத்தும் குழாய்களை தயாரிக்கும் நிறுவனம் நடந்தி வந்தார். இந்தநிலையில் பேன்சிரக பட்டாசுகளுக்கு அதிக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தினால் தனது குழாய் தயாரிக்கும் நிறுவனத்திலேயே அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் திருப்பதியும், 17 வயது சிறுவனும் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதில் மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட திருப்பதி என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரை தொடர்ந்து தீக்காயம் அடைந்த 17 வயது சிறுவனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.