மதவாத அரசியலை இந்தியா கூட்டணி எதிர்த்து வருகிறது; தொல்.திருமாவளவன் பேச்சு

மதவாத அரசியலை இந்தியா கூட்டணி எதிர்த்து வருகிறது என மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மாநாட்டில் தொல். திருமாவளவன் பேசினார்.;

Update: 2023-09-16 18:45 GMT

நாகர்கோவில், 

மதவாத அரசியலை இந்தியா கூட்டணி எதிர்த்து வருகிறது என மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மாநாட்டில் தொல். திருமாவளவன் பேசினார்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மாநாடு

மணிப்பூர் கொடூரங்களை மன்னிக்க மாட்டோம் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் சிறப்பு மாநாடு நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஆசை தம்பி, அரசியல் தலைமை குழு உறுப்பினர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தொடக்க காலத்தில் இருந்து பா.ஜ.க. மத அரசியலை செய்து வருகிறது. மதவாத அரசியலை இந்தியா கூட்டணி எதிர்த்து வருகிறது. கம்யூனிஸ்டு கட்சிகள் அனைத்தும் மக்களுக்கு எதிரான மதவாத சக்திகளை தடுத்து, அதனை மக்களுக்கு எடுத்துக்காட்டுகிறது. உலகில் நூற்றுக்கணக்கான மதங்கள் தோன்றி காலப்போக்கில் அழிந்துள்ளது.

சனாதனம்

சனாதனம் என்பது கோட்பாடு அல்ல. அதற்கு சரியான பொருள் நிலையானது, மாறாதது ஆகும். மாறாதது என்று அவர்கள் கூறுவது, பிறப்பின் அடிப்படையில் மனிதர்களின் உயர்வு, தாழ்வு ஆகும். சனாதன தர்மத்தை நாடு முழுவதும் பரப்பியது ராமாயணம் மற்றும் மகாபாரதம். சனாதனம் என்பது குலத் தொழிலாகும். சனாதனம் எதிர்ப்பு குறித்து அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஏற்கனவே பேசியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநிலக்குழு உறுப்பினர் சுசீலா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் காலித், மேசியா உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்