இதற்கு முன்பு ஒருபோதும் கிடைத்திராத அவுட்டோர் அனுபவத்தை வழங்கும் ஹுண்டாய் எக்ஸ்டெர் எஸ்யுவி...!

ஸ்போர்ட்டியான ஹுண்டாய் எக்ஸ்டெர் என்ற எஸ்யுவி வாகன அறிமுகத்தை ஹுண்டாய் மோட்டார் அறிவித்திருக்கிறது

Update: 2023-07-11 10:05 GMT

முத்திரைபதித்த H-LED DRLகள் மற்றும் டெய்ல் லாம்ப்-களுடன் ஒரு புரட்சிகர ஸ்டைலிங் வழியாக ஹுண்டாய் வடிவமைப்பு அடையாளமான 'குதூகலமளிக்கும் ஸ்போர்ட்டினஸ்' என்பதன் புதிய பரிமாணத்தை ஹுண்டாய் எக்ஸ்டெர் வழங்குகிறது

*இந்த எஸ்யுவி-யின் திடகாத்திரமான இருப்பை மேலும் வலுவாக்கும் வகையில் முன்புற மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்கள் அமைந்துள்ளன

*40-க்கும் அதிகமான மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் இப்பிரிவில் ஒரு புதிய அளவுகோலை ஹுண்டாய் எக்ஸ்டெர் உருவாக்கியிருக்கிறது. அனைத்து டிரிம்களிலும் 26 ஸ்டான்டர்டு பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுகின்றன**. மேலும், ஒரு வழக்கமான அம்சமாக அனைத்து டிரிம்களிலும் 6 ஏர்பேகுகள் என்பதன் மூலம் ஒரு புதிய தரநிலையை எக்ஸ்டெர் நிறுவுகிறது.

*இப்பிரிவில் முதன்முறையாக 20 அம்சங்கள் மற்றும் இப்பிரிவில் மிகச்சிறந்த 9 அம்சங்கள் என்பதுடன் வேறொரு புதிய தரநிலையையும் எக்ஸ்டெர் உருவாக்குகிறது

*5-ஸ்பீட் MT &ஸ்மார்ட் ஆட்டோ AMT என்ற விருப்பத்தேர்வுடன் 1.2 லி கப்பா பெட்ரோல் இன்ஜின் (E20 எரிபொருளுக்கு ஏற்றது) மற்றும் 5-ஸ்பீட் MT உடன் 1.2 லி இரட்டை எரிபொருள் பயன்படுத்தும் திறன் கொண்ட கப்பா பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என்ற 3 பவர்டிரெய்ன் விருப்பத்தேர்வுகளுடன் இது கிடைக்கிறது

*ரேஞ்சர் காக்கி, காஸ்மிக் புளூ என்ற இரு புதிய &பிரத்யேக வண்ணங்களுடன் 3 இரட்டை வண்ண வெளிப்புற விருப்பத்தேர்வுகளுடனும், 6 தனிப்பட்ட வண்ண விருப்பத்தேர்வுகளிலும் எக்ஸ்டெர் கிடைக்கிறது

*3 ஆண்டுகள் / வரம்பற்ற கிமீ என்ற இப்பிரிவில் மிகச்சிறந்த வாரண்டியுடன் ஹுண்டாய் எக்ஸ்டெர் வெளிவருகிறது

குருகிராம், 10 ஜுலை, 2023: இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வுகள் வழங்குனர் மற்றும் தொடங்கியதிலிருந்து இந்நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் என்ற பெருமைக்குரிய ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL), அதன் ஸ்போர்ட்டியான ஹுண்டாய் எக்ஸ்டெர் என்ற எஸ்யுவி வாகன அறிமுகத்தை இன்று அறிவித்திருக்கிறது. அழகான வெளிப்புற அம்சங்கள், விசாலமான உட்புற வசதிகள், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம், மற்றும் அற்புதமான செயல்திறன் ஆகிய அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் ஹுண்டாய் எக்ஸ்டெர், அதன் பிரிவில் புதிய தர அளவுகோலை மறுவரையறை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்து ஆராய வேண்டும் என்ற ஆர்வமுள்ள புதுயுக வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் ஹுண்டாய் எக்ஸ்டெர்-ன் பண்பியல்புகள் இருக்கின்றன

ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் &தலைமை செயல் அலுவலர் திரு. அன்சூ கிம், ஹுண்டாய் எக்ஸ்டெர் அறிமுக நிகழ்வின்போது கூறியதாவது: "ஹுண்டாய் மோட்டார் இந்தியா, அதன் புரட்சிகரமான தயாரிப்புகள் &தொழில்நுட்பங்களின் வழியாக வாகன தொழில்துறையில் புதிய தர அளவுகோல்களை எப்போதும் உருவாக்கி வந்திருக்கிறது. புதுமையான வடிவமைப்பு, நுண்ணறிவான தொழில்நுட்பம் மற்றும் மிகச்சிறப்பான செயல்திறன் ஆகியவற்றின் மீது ஹுண்டாய் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை தன்னகத்தே கொண்டிருக்கும் எக்ஸ்டெர் வாகனத்தின் வழியாக அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இதன் நவீன மற்றும் திடகாத்திரமான வெளிப்புற அம்சங்கள், நவீன தொழில்நுட்பம் மற்றும் நிகரற்ற பாதுகாப்பு அம்சங்களினால் வேகமாக வளர்ந்து வரும் இப்பிரிவை ஹுண்டாய் எக்ஸ்டெர் மறுவரையறை செய்ய தயார் நிலையில் இருக்கிறது. எமது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை ஹுண்டாய் எக்ஸ்டெர் நிச்சயமாக விஞ்சும் மற்றும் இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வுகள் வழங்குனர் என்ற ஹுண்டாய்-ன் அந்தஸ்தை மேலும் வலுவாக உறுதிசெய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்."

'Think outside. Think EXTER' என்ற எக்ஸ்டெர்-ன் முதன்மை வாசகம், வீட்டிற்கு வெளியே பயணங்களை மேற்கொண்டு மகிழ்ச்சியோடு நேரத்தை செலவிடும் இதன் தனித்துவ அம்சத்தை சுட்டிக்காட்டுவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. அழகு நிறைந்த இயற்கை உலகிடமிருந்து உத்வேகத்தைப் பெற்றிருக்கும் ஹுண்டாய் எக்ஸ்டெர், வெளி உலகை ஆராயும் ஆர்வமுள்ளவரின் அடையாளத்தை பிரதிபலிக்கிறது.

உலக கிரிக்கெட்-ல் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராகவும், கிரிக்கெட்-ன் இளைய இரசிகர்களின் நாயகனாகவும் திகழும் ஹர்திக் பாண்டியா, ஹுண்டாய் எக்ஸ்டெர்-க்காக ஒரு பிரத்யேக பிராண்டு தூதராக இணைந்திருக்கிறார். வெளிப்புற ஆராய்ச்சி நிகழ்வுகளிலும், பயணத்திலும், பொழுதுபோக்கிலும் ஈடுபடுகிற ஜென் MZ என்ற புதுயுக இளந்தலைமுறையினரின் எண்ணங்களை ஹுண்டாய் எக்ஸ்டெர் பிரதிபலிக்கும்போது, அவரது ஆற்றல்மிகுந்த, உயிரோட்டமான வாழ்க்கை முறையின் வழியாக இதே பண்பியல்புகளை ஹர்திக் பாண்டியாவும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்துகிறார். அவரது ஆற்றல் ஈடுபாடு மற்றும் கற்பனா திறன் ஆகிய பண்புகளினால், ஹுண்டாய் எக்ஸ்டெர்-ன் பிராண்ட் விளம்பரத்திற்கு மிகப்பொருத்தமான சேம்பியனாக ஹர்திக் மிகக் கச்சிதமாக பொருந்துகிறார்.

ஊக்கமூட்டும் சுற்றுச்சூழலுக்கு தோழமையான பவர்டிரெய்ன்

இப்பிரிவில் நிகரற்ற 1.2 லி கப்பா பெட்ரோல், 4 சிலிண்டர் இன்ஜினுடன் வெளிவரும் ஹுண்டாய் எக்ஸ்டெர், மிருதுவான ஆக்ஸிலரேஷனையும் நேர்த்தியான உயர் செயல்திறனையும் வழங்குகிறது. கிளர்ச்சியூட்டும் டிரைவிங் அனுபவத்தை வழங்கும் E20 எரிபொருள் தயார்நிலை கொண்ட 3 பவர்டிரெய்ன் விருப்பத்தேர்வுகளிலிருந்து வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பியதை தேர்வுசெய்யலாம். AMT டிரான்ஸ்மிஷன், பேடில் ஷிப்ஃடர்கள் (இப்பிரிவில் முதலாவதாக), மெட்டல் பேடில்கள் (இப்பிரிவில் முதலாவதாக) ஆகியவற்றை உள்ளடக்கிய AMT பெர்பார்மன்ஸ் பேக்-ன் மூலம் எக்ஸ்டெர், திடகாத்திரமான அனுபவத்தை வழங்குகிறது. சுற்றுச்சூழலுக்கு தோழமையான இதன் பவர்டிரெய்ன் விருப்பத்தேர்வுகள் கீழ்கண்டவற்றை உள்ளடக்கும்:

•மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் (MT) கூடிய 1.2 லி கப்பா பெட்ரோல் இன்ஜின்

•ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் (AMT) கூடிய 1.2 லி கப்பா பெட்ரோல் இன்ஜின்

•மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் (MT) (இப்பிரிவில் முதலாவதாக) கூடிய 1.2 லி இரட்டை எரிபொருள் கப்பா பெட்ரோல் &சிஎன்ஜி இன்ஜின்


 அறிமுக விலை:


ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் குறித்து

ஹுண்டாய்மோட்டார்இந்தியாலிமிடெட் (HMIL) என்பதுஹுண்டாய்மோட்டார்கம்பெனிக்கு (HMC) முற்றிலும் சொந்தமான ஒருதுணை நிறுவனமாகும்.இந்தியாவில் தொடங்கப்பட்ட நாளிலிருந்தேகார் ஏற்றுமதியில் முதலிடத்தை வகித்துவரும் ஹுண்டாய், இந்தியாவின் முதல்ஸ்மார்ட்மொபிலிட்டி தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகவும் திகழ்கிறது. தொழில்துறைக்கு வழிகாட்டும் தொழில்நுட்பத்தின் மூலம் போக்குவரத்துத் தீர்வுகளை வழங்குவதன் வழியாக எதிர்கால தலைமுறைகளுக்கு நிலைப்புத்தன்மையுள்ள கண்ணோட்டத்தை ஹுண்டாயின் உலகளாவிய பிராண்ட் தொலைநோக்கு குறிக்கோளான 'மானுடத்திற்கான வளர்ச்சி' உருவாக்குகிறது.

 இந்தியாவெங்கிலும் 1351 விற்பனை முனைகள் மற்றும் 1515 சர்வீஸ் முனைகள் கொண்ட மிக வலுவான வலையமைப்பைக் கொண்டு தனது செயல்பாடுகளை ஹுண்டாய் மோட்டார் இந்தியா தற்போது மேற்கொண்டு வருகிறது. தற்போதுகிராண்டு i10 நியோஸ், ஆல்நியூ i20, i20 N Line, ஆரா, வென்யூ, ஸ்பிரிட்டட்நியூவெர்னா, ஆல்நியூகிரேட்டா, அல்கஸார், நியூடக்ஸன் மற்றும் ஆல்எலக்ட்ரிக்எஸ்யுவிஐயோனிக் 5 என்ற 12 மாடல்களில் கார்களை தயாரித்து இதுவழங்கிவருகிறது. சென்னை அருகே உள்ள HMIL-ன் ஒருங்கிணைந்த அதிநவீன தயாரிப்பு தொழிற்சாலையில்அதிநவீனஉற்பத்தி, தர மற்றும் பரிசோதனை வசதிகள் உள்ளன. ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியா பசிபிக் ஆகியவற்றில் 88 நாடுகளுக்கு தனது வாகனங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் HMC-ன் உலகளாவிய ஏற்றுமதி மையத்தின் மிக முக்கிய அங்கமாகவும் ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் செயல்படுகிறது.

மேலதிக தகவலுக்கு, உங்கள் அருகிலுள்ள ஷோரூமை தொடர்புகொள்ளவும்

Tags:    

மேலும் செய்திகள்