துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீசார் மரியாதை

நெல்லையில் காவலர் வீரவணக்க நாளையொட்டி துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீசார் மரியாதை செலுத்தினர்.

Update: 2023-10-21 19:14 GMT

1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் 'காவலர் வீரவணக்க நாள்' அனுசரிக்கப்படுகிறது.

நெல்லை ஆயுதப்படை வளாகத்தில் நேற்று காவலர் வீர வணக்க நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் நெல்லை போலீஸ் டி.ஐ.ஜி.பிரவேஷ்குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் ஆதர்ஷ் பசேரா, சரவண குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலசந்திரன், தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முதல் போலீசார் வரை மலர் வளையம் வைத்து, 30 குண்டுகள் முழங்க, இன்னுயிர் நீர்த்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்