வாகனம் நிறுத்தும் இடமாக மாறிய அண்ணாசாலை

வேலூரில் வாகனம் நிறுத்தும் இடமாக மாறிய அண்ணாசாலை;

Update: 2022-06-04 14:09 GMT

வேலூர்

வேலூர் அண்ணாசாலை பழைய மீன் மார்க்கெட் அருகே தள்ளுவண்டிகளில் பலர் பழக்கடைகள் உள்ளிட்ட கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மேயர் சுஜாதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அண்ணாசாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் டயர்களில் இருந்த காற்றை இறக்கி விட்டனர்.

இந்த நிலையில் அங்கு தற்போது ஒரு சிலர் மட்டும் கடைகளை வைத்து மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். அங்கு ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் அண்ணாசாலையில் அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடமாக காட்சியளிக்கிறது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்