பழுதாகி பாதி வழியில் நின்ற அரசுபஸ்

ஏலகிரி மலையில் பாதி வழியில் பஸ் பழுதாகி நின்றதால் பயணிகள் நடந்து சென்றனர்.

Update: 2023-04-19 18:52 GMT

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு, திருப்பத்தூரில் இருந்து தினசரி அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து ஏலகிரி மலை நிலாவூர் நோக்கி அரசு பஸ் சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றது. ஏலகிரி மலை 10-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது திடீரென பஸ் பழுதாகி நின்றது. இதனையெடுத்து அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்றனர்.

பின்னர் திருப்பத்தூர் பணிமனையில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது. கடந்த 3-ந் தேதி இதேபோல் அரசு பஸ் திடீரென பழுதாகி பாதி வழியில் நின்றது. பள்ளி பொது தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகரிக்கும் வகையில் புதிய பஸ்கள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்