சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.;

Update: 2022-08-18 20:07 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி விஷ்ணுபிரியா நகரை சேர்ந்த ராஜசேகர் மகன் சண்முகவேல்ராஜ் (வயது 41).

இவர் கடந்த 2013-ம் ஆண்டு நெல்லை பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

இதுகுறித்து நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சண்முகவேல்ராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி அன்புசெல்வி வழக்கை விசாரித்து சண்முகவேல்ராஜிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்