சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-08-14 20:08 GMT

பண்ருட்டி, 

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரை சேர்ந்தவர் வீராசாமி மகன் மாரி (வயது 24). இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் மேல்மருவத்தூருக்கு சென்றார். அங்கு சிறுமியை சந்தித்த மாரி, அவளிடம் ஆசை வார்த்தை கூறி தனது செல்போன் நம்பரை கொடுத்துள்ளார். இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்த சிறுமி, மாரியிடம் செல்போன் மூலம் பேசி வந்துள்ளாள். சம்பவத்தன்று சிறுமியை கடலூருக்கு மாரி வரவைத்துள்ளார். பின்னர் ஆசை வார்த்தை கூறி அங்கிருந்து சிறுமியை மாரி கடத்தி சென்றதாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை கடத்தி மாரி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. இதையடுத்து சிறுமியை மீட்டதோடு, மாரியை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் இந்த வழக்கு பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் மாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்