16 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது

சேலத்தில் 16 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-05-11 20:41 GMT

சேலத்தில் 16 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குழந்தை பிறந்தது

சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு நேற்று வீட்டில் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை உறவினர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அந்த சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில் அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை எடை குறைவாக இருந்ததால் இன்குபேட்டரில் வைக்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

திருமணமாகவில்லை

அதன்பேரில் போலீசார், ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் குழந்தையை பெற்றெடுத்த அந்த சிறுமிக்கு திருமணமாகவில்லை என்றும், உறவினர் ஒருவரை காதலித்து வந்ததும் தெரியவந்தது. எனவே அவரை பிடித்து விசாரணை நடத்தினால் தான் முழு விவரம் தெரியவரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சிறுமிக்கு குழந்தை பிறந்தது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல மைய அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்