சிவகாசி
சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ஒருவர், தனது மகனுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கஞ்சா புகைக்க பழகி கொடுத்து அவனுக்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதாக போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து மீனாட்சி காலனியை சேர்ந்த ஸ்ரீஹரிஹரன் (வயது 23) என்பவரை கைது செய்தனர். சிவகாசி பகுதியில் சிறுவர்கள், மாணவர்கள் என பலர் கஞ்சா புகைக்க பழகி உள்ள நிலையில் இதனை தடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.