ஊழலின் ஊற்று உடைந்து நொறுங்கியிருக்கிறது - அண்ணாமலை விமர்சனம்
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மக்களின் வரிப்பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது. ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், சென்னை ஐகோர்ட்டின் இன்றைய தீர்ப்புக்கு பின், அமைச்சர் பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார்.
திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டடம் தேவைப்படும் போலத் தெரிகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.