குடிநீர் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

அம்பையில் குடிநீர் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.;

Update: 2023-04-10 20:09 GMT

அம்பை:

அம்பை நகராட்சியில் ரூ.36.60 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. அம்பை வேலாயுதநகர் பகுதியில் உள்ள நகராட்சி மேல்நிலை குடிநீர் தொட்டி அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரசபை தலைவர் கே.கே.சி.பிரபாகர பாண்டியன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி மேனேஜர் பிரேமா வரவேற்றார்.

நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். நிகழ்ச்சியில் நகராட்சிகளின் மண்டல இயக்குனர் விஜயலட்சுமி, மண்டல என்ஜினீயர் இளங்கோவன், நகராட்சி பணி மேற்பார்வையாளர் சோலைச்சாமி, சுதாகர், ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம், நகராட்சி கவுன்சிலர்கள் செலின்ராணி, அனுசுயா மாரியப்பன், அழகம்மை மாரியப்பன், கல்யாணி செந்தில்குமார், ராமசாமி என்ற தாஸ், கோதர் இஸ்மாயில், பேச்சியம்மாள் சிவகுருநாதன், பேச்சிகனியம்மாள் சுப்பிரமணியன், சவுரா பானு செய்யதுஅலி, முத்துலட்சுமி சிவகுருநாதன், மாரியம்மாள் கணேசன், லதா பிச்சையா, ஜோதிகலா சிங்கநாதம், வேலுச்சாமி, முத்துகிருஷ்ணன், தி.மு.க. நிர்வாகிகள், கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட இலக்கிய அணி ராமசாமி, துணை அமைப்பாளர்கள் முத்துப்பாண்டி, ராமையா, சண்முகவேல், அமானுல்லா கான், மாவட்ட பிரதிநிதிகள் அண்ணாதுரை, ராதாகிருஷ்ணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்