சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-03 19:28 GMT

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் சத்துணவு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜவேம்பு தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ஆனந்தவல்லி வரவேற்று பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க பொறுப்பாளர் ரமேஷ் வாழ்த்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவு பணியாளர்கள், காலை உணவு திட்டத்தை தனியாருக்கு தாரை வார்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சத்துணவு ஊழியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் படிப்படியான பதவி உயர்வு திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். சத்துணவு ஊழியர் சங்க பொறுப்பாளர் சசிகலா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்