மேகமலை அருவியில் நீர்வரத்து குறைந்தது

மேகமலை அருவியில் நீர்வரத்து குறைந்தது.;

Update: 2023-02-25 18:45 GMT

கடமலைக்குண்டு அருகே மேகமலை அருவி உள்ளது. இந்த அருவிக்கு மேகமலை வனப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில வாரங்களாக மழை பெய்யவில்லை. இதனால் அருவியில் நீர்வரத்து குறைந்தது. இதன்காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது. இதற்கிடையே அருவியில் போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்