மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
பலத்த காற்று
குமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்திய வானிலை ஆய்வு மையம் கன்னியாகுமரி கடல் பகுதியில் வளி மண்டல சுழற்சி உருவாகி சூறைக் காற்று வீசும் என்பதால் குமரி கடல் பகுதியில் 18 மற்றும் 19-ந்தேதிகளில் (அதாவது நேற்றும், இன்றும்) காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரை வீசும். எனவே மீனவர்கள் இந்த நாட்களில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தது.
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
அதைத்தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
கன்னியாகுமரியை அடுத்துள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. நேற்று சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. விசைப்படகுகள் அனைத்தும் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.