சுவரொட்டி ஒட்டுவதற்கு முதல்கட்டமாக கோர்ட்டு அருகே பதாகை

சுவரொட்டி ஒட்டுவதற்கு முதல்கட்டமாக கோர்ட்டு அருகே பதாகை வைக்கப்பட்டிருந்தது.

Update: 2022-10-14 22:44 GMT

திருச்சி மாநகரை அழகுபடுத்தும் வகையில் பூங்காக்கள் செப்பனிடப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் ஆங்காங்கே சாலைகள் சீரமைப்பு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே மாநகரில் விளம்பர பதாகைகள் வைக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அரசு கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டக்கூடாது என்றும், மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதையடுத்து மாநகரில் சுவரொட்டி ஒட்டுவதற்காக பொது இடம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் ஒவ்வொரு மண்டலத்திலும் 5 இடங்கள் உள்பட மொத்தம் 25 இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக கோர்ட்டு அருகே மாநகராட்சி சார்பில் பொது சுவரொட்டி பலகை என்ற பதாகை வைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் அங்கே சுவரொட்டி ஒட்டிக்கொள்ளலாம். இதில் குறிப்பாக கலெக்டர் அலுவலகம் அருகே, மத்திய பஸ்நிலையம், சத்திரம் பஸ் நிலையம் உள்பட 25 இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இது குறித்து ஏற்கனவே சுவரொட்டி அச்சக உரிமையாளர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும், இதை முறைப்படுத்த ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்