குறைதீர்வு கூட்டத்திற்கு வேப்பிலையுடன் விவசாயிகள் வந்ததால் பரபரப்பு

ஆரணியில் நடந்த குறைதீர்வு கூட்டத்திற்கு வேப்பிலையுடன் விவசாயிகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-05 18:02 GMT

ஆரணியில் நடந்த குறைதீர்வு கூட்டத்திற்கு வேப்பிலையுடன் விவசாயிகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஆரணி உதவி கலெக்டர் எம். தனலட்சுமி தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குனர் செல்லதுரை முன்னிலை வகித்தார். ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா வரவேற்றார்.

இதில் கலந்து கொள்ள விவசாயிகள் வேப்பிலைகளுடன் வந்திருந்ததால் கூட்டம் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம புறங்களில் இருந்து விவசாயிகள் தங்களுக்கு தேவையான கோரிக்கைகளை மனுக்களாக சம்பந்தப்பட்ட துறைகளில் வழங்கியுள்ளனர்.

பல மாதங்கள் ஆகியும் விவசாயிகள் நடையாய் நடந்தாலும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளின் மனுக்கள் மீதான கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் கிடப்பில் போட்டு கால தாமதம் ஏற்படுத்தி வருவது வழக்கமாகவே உள்ளது என்று வேப்பிலைகளை உயர்த்திப்பிடித்து அசைத்தவாறு ஆவேசமாக பேசினர்.

அவர்களிடம் கோட்டாட்சியர் எம் தனலட்சுமி உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டனர். அதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

========

Tags:    

மேலும் செய்திகள்